Thursday, 3 August 2017

அன்பே சிவம்

     

                          உலக நாயகன்


           சினிமாவைப் பற்றி சிந்திக்காத தமிழ் நெஞ்சம் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு திரைபடம தமிழனின் வாழ்வியலோடு கலந்து விட்டது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.

        இப்போதைய இயக்குனர்கள் சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். நல்ல கதையம்சமுள்ள திரைகதைகளை தருகிறார்கள். ஆனால் அவர்களையும் தாண்டி பல ஆண்டுகளாக  திரையுலகில் களத்தூர் கண்ணனாக கோலோச்சி நிற்கிறார். பலதுறை மன்னனாக சகலகலாவல்லவனாக திரைத்துறையை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து, பின்பு சேர்த்து தனி திரைதுறை வரலாறு படைத்த நாயகன்.

       

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக, நடன இயக்குநராக தன்னை இணைத்துக் கொண்டவர். திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் பிரகாசித்தவர்.            
     
        நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?  உங்கள் ஊகம் சரிதான். கமல்ஹாசன்  அவர்கள் தான்.

       
எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறப்பிலேயே இருக்க வேண்டும் அப்படிபட்ட ஆவல் கொண்டு பிறந்தவர் கமல் அவர்கள்.

     
   முயன்று பெற்ற தேற்ற பண்புகளை அதிகம் கொண்டவர்.ஆராய்ந்து அறிந்து பிறருக்கும் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட காரணமானவர்.

   
     நடனம், இசை, கவிதை, நாடகம், உரைநடை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், படத்தொகுப்பு, காட்சியமைப்பு, நடிப்பு, நாடகம், பேச்சு, கட்டுரை, சிறுகதை, நாவல், அரசியல், நற்பணி இயக்கம், தனிபெரும்ஆளுமை, தன்னிகரற்ற தலைவன் என பன்முக தன்மை கொண்டு விளங்குபவர். சகலகலைகளிலும் வல்லவர்.

       
  பல விருதுகளைப் பெற்றவர். அவர் சொன்னது '' ஒரு சமூகத்தில் மாற்றத்திற்கான காரணியாக கலைத்துறை திகழ வேண்டும்".

         மக்கள் நாகரிக மாற்றமடைய முக்கிய தளமாக கலைத்துறை இருக்க வேண்டும்.

         கலைத்துறையின் தலைமகன் கமல் அவர்கள்.

         அவர்களுடைய இரண்டு திரைப்படங்களான தசாவதாரம், அன்பே சிவம் ஆகிய படங்களை பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
 

Friday, 28 July 2017

இன்று ஒரு ஆரம்பம்

            வெகு நாட்களாக ஒரு வலைபதிவு துவங்கி அதில் கருத்துக்களை எழுத வேண்டும் என ஆவல்.
அந்த ஆவல் இன்று நிறைவேறியது.

           மனிதன்  தன்னைச்  சுற்றியுள்ள மற்றும் தொலைவிலுள்ள மனிதனுடன் தொடர்பு கொள்ள மொழியை உருவாக்கினான்.

            தொடர்பு கொள்ள உருவாக்கப்பட்ட மொழி
தகவலை பரிமாறவும் கருத்துக்களையும் கருத்தாக்கங்களையும் உருவாக்கி புரட்சி செய்து கொண்டிருக்கிறது.
            நமது தாய்மொழியில் எழுதுவது பெருமையும் மகிழ்ச்சியும் கூட. எவ்வித தடங்கலும் இல்லாமல் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும்

            பிறர் மனம் வருத்தப்படாமல் எனது பதிவை பதிய முற்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

             இந்த  பதிவு எனது அறிமுக பதிவு என்பதால் மற்றதைப் பற்றி பின்வரும்  பதிவுகளில் பார்ப்போம்.

            மாற்றம் ஒன்றே மாறாதது.  இந்த நிலையும் மாறும்.